இந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டம்: புவனேஷ்வர் குமார்

இந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி எம்.எஸ். டோனியின் தலைமையில் மூன்று ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையில் இன்னும் ஒன்றைக்கூட வெல்லவில்லை.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.
இந்நிலையில் 2013-க்குப்பிறகு இந்தியா ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாம் கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அதன்பின் 3 அல்லது நான்கு தொடர்களில் விளையாடியுள்ளோம். நாம் அரையிறுதிக்கு அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளோம்.
2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றோம். அதேபோல் கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் தோற்றோம். இது அதிர்ஷ்டம் இல்லாதது. மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை முன்னதாகவே இழந்ததால் வாய்ப்பை இழந்தோம்.
எதிரணியை 250-க்குள் கட்டுப்படுத்தி நாம் தோல்வியடைந்தது மிகவும் அபூர்வமானது. ஒட்டுமொத்த தொடரில் ரோகித் சர்மா 5 சதங்கள் விளாசினார். கே.எல். ராகுல் நல்ல பார்மில் இருந்தார். விராட் கோலி எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர். அவருடன் டோனியையும் பெற்றிருந்தோம்’’ என்றார்.

Related posts

Leave a Comment