கொள்ளை கொள்ளும் குரோட்டன்ஸ்

காரியாபட்டி காரியாபட்டி பகுதியை பசுமையாக்கும் நோக்கில் ஸ்ரீ பிரேமிக வரதன் நர்சரி செயல்படுகிறது.

ஆந்திரா, பெங்களூர், கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து செடிகள், மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பஞ்ச கவ்யம், மீனமிலம் என இயற்கை உரங்கள் மூலம் எந்த சூழ்நிலையிலும் வளரும் செடிகள் உருவாக்கப்படுகிறது.

லில்லி, டயமண்ட் பாக்யா, பாம்ஸ், பெட்ரா, கொய்யா, ரோஸ், பாரிஜாதம், பவளமல்லியுடன் நந்தியாவட்டை, சிறியாநங்கை, துளசி, வசம்பு, லெமன்கிராஸ், வெட்பாலை உள்ளிட்ட மூலிகை கன்றுகள், மா, சப்போட்டா, பலா உள்ளிட்ட பழ வகை கன்றுகள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாட்டு செர்ரி, இன்சுலின், சிவப்பு, மஞ்சள் கொன்றை, மந்தாரை, மகிழம், கடம்பு, இலுப்பை, உத்திராட்சம், திருவோடு உள்ளிட்ட ஏராளமான செடிகள் வளர்க்கப்படுகின்றன.

இதன் உரிமையாளர் சுப்புலட்சுமி: குறைந்த தண்ணீர் செலவில் அடர்நடவு முறையை பின்பற்றி கொய்யா, அர்க்காகிரெயின், தாய்வான்பிங்க், எல் 49, லலீத், சீனிக்கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழ வகை கன்றுகள் விற்பனை செய்கிறேன் . குறைந்த விலையில் கிடைத்தது போதும் என விற்பனை செய்வதால் மனசுக்கு ரிலாக்சாக உள்ளது,என்றார்.

Related posts

Leave a Comment