தடுக்கலாமே நீர் வழிப்பாதையில் கொட்டப்படும் குப்பை: இயற்கை வளங்களுக்கு காத்திருக்கு பாதிப்பு

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்புவாசிகள், உள்ளாட்சி நிர்வாகங்களும் நீர் வழிப்பாதை என நினைத்த இடங்களில் குப்பையை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நிலம், நீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மாவட்டத்தில் சேகரமாகும் குப்பை, ஓட்டல் கழிவுகள், டீக்கடை, இறைச்சிக் கடை கழிவுகள் என தினமும் பெருமளவில் குவிகின்றன. குடியிருப்புகளில் தினமும் டன் கணக்கில் சேரும் குப்பையை வீடுகளை தேடி வரும் துாய்மைப்பணியாளர்கள் பெற்று செல்கின்றனர். இவர்கள் வரும் நேரம் குப்பை போடாதவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், வரத்து கால்வாய்களில் கொட்டுகின்றனர். இதனால் ஏற்படும் பாதிப்பு தெரிந்தும் தொடர்ந்து இதே செயலை செய்கின்றனர்.

சில ஊராட்சிகளில் போதிய பணியாளர்கள் இல்லாததை காரணம் காட்டி முறையாக குப்பையை தரம் பிரிக்கும் பணிகளை செய்யாமல் கண்மாய் , நீர் வழிப்பாதைகளில் கொட்டி தீ வைக்கின்றனர். பிளாஸ்டிக் குப்பை மழைக்காலங்களில் மழைநீருடன் அடித்து வந்து நீர் நிலைகளில் கலப்பதால் நிலத்தடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடிநீரின் தன்மையும் மாறி விடுகிறது.

வேதனை அளிக்கிறது

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றின் ஓரத்தில் கழிவுகளை கொட்டி மாசு படுத்துவது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது. இதில் வைக்கப்படும் தீயால் காற்று மாசு ஏற்படுவதுடன் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை தரம் பிரிப்பதற்கு என ஏற்படுத்தப்படட குப்பை குழிகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் ஆர்வமுள்ள தனியார் பங்களிப்பை இப்பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–ரகு, விவசாயி,ராஜபாளையம்.

Related posts

Leave a Comment