பண்ணைக்குட்டை ‘ஓகே’ மானியம் வராததால் அவதி

ராஜபாளையம்:பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்கு உரிய நேரத்தில் மானியம் வழங்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

ராஜபாளையம் கலங்காபேரி புதுாரை சேர்ந்தவர் பாலமுருகன். 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கண்மாய் பாசன வசதி இல்லாத விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்து மழை நீரை சேமிக்க மத்திய அரசின் நீர்வள மேம்பாட்டு துறை தலா ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் பாலமுருகன் ரூ.70 ஆயிரம் செலவழித்து 60 சதவீத பணிகளை முடித்தார். ரூ.30 ஆயிரம் மட்டுமே மானியம் கிடைத்தது. பாலமுருகன் விரக்தி யில் உள்ளார். இவருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் வந்து விடக்கூடாது என எண்ணிய விவசாயிகள் பலர் பண்ணைக்குட்டைக்காக தோண்டிய பள்ளத்தையே மூடி விட்டனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment