சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.

சிவகாசி நகராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் - அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.சிவகாசி:

சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட நேரு காலனியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய சமுதாய கூடம், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது. இதன் பூமி பூஜை நேற்று காலை நேரு காலனியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதேபோல் எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் அருகில் ரூ.15 லட்சம் செலவில் ஒரு பஸ் நிறுத்தம், காரணேசன் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் ஒரு பஸ் நிறுத்தம், சிவகாசி அண்ணாமலை நாடார்-உண்ணாமலை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.36 லட்சம் செலவில் புதிய கலையரங்கம் ஆகியவைகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.

ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடங்களுக்கான பூமிபூஜையில் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, என்ஜினீயர் ராமலிங்கம், சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், பொன்சக்திவேல், அசன்பதுருதீன், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளி சசிகுமார், கருப்பசாமிபாண்டியன், கே.டி.ஆர்.கார்த்தி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழர்களுக்கு தி.மு.க. செய்த துரோகம் பெரியது. 2021 தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.வே ஆட்சி அமைக்கும்.

எடப்பாடியார் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். மு.க.ஸ்டாலின் 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். 2 முறையும் அந்த தீர்மானங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பொய்கதைகளை கூறி அறிக்கை விடுவது ஸ்டாலினின் அன்றாட வேலையாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

Leave a Comment