கட்டுப்பாட்டை மீறல; கட்டுக்குள் கொரோனா சபாஷ் பெறும் வரலொட்டி

விருதுநகர்:ஊரடங்கில் விவசாய பணிகள் உட்பட அனைத்தும் முடங்கி வருகிறது.

கிராமங்களில் விவசாயிகள் காலை 11:00 மணிக்குள் பணிகளை முடித்து வீடு திரும்பி

விடுகின்றனர்.வீட்டில் படுத்து முடங்குவதை விட பகல் பொழுதை பயனுள்ளதாக கழிக்க வேண்டும்.

அதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றியே இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற சுய சார்பு கட்டுப்பாடுகளுடன் ஊரின் மைய பகுதிக்கு வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி அடர்ந்த வேப்பமரங்களின்நிழலில் தஞ்சமடைகின்றனர்.

கிராமங்களில் தொன்று தொட்டு மக்கள் கூட்டாக பங்கேற்கும் ‘தாயம்’ விளையாட்டை தேர்வு செய்து மாலை வரை விளையாடி ஆனந்தமாக பொழுதை கழிக்கின்றனர் விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராம மக்கள்.

ஊராட்சி அலுவலகம் எதிரே காளியம்மன் கோயில் மந்தையில் ஒன்று கூடும் இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொழுதை கழிக்கின்றனர். இருவர், இருவராக ஜோடி சேர்ந்து பத்து பேர் தாயக்கட்டையை உருட்டுகின்றனர். தாயத்தில் விழும் எண்ணிக்கையை பொருத்து

தாயக்கட்டத்தில் காய்களை நகர்த்துகின்றனர்.

தாயம் விளையாடுவதை வேடிக்கை பார்க்கவும் ஒரு கூட்டம் ஆங்காங்கே இருந்து ஆர்வமாக கண்காணிக்கிறது. தேவையில்லாத வீண் பேச்சு, அரசியல் பேச தடை, ஊர் வம்பை இழுப்பது போன்ற நையாண்டிகளில் ஈடுபடக்கூடாது என்ற கிராம பெரியவர்களின் கட்டளையை மீறாது உள்ளது தனி சிறப்பு.

மூளைக்கு வேலை கொடுக்கும் தாயம் விளையாட்டை அமைதியாக, ஆர்வமாக, சலசலப்புக்கு இடம் கொடுக்காமலும் பார்த்து கொள்கின்றனர்.

வெளியில் சுற்றுவதில்லை

கிராமத்தில் 3000 பேர் வசிக்கின்றனர். 180 எண்ணிக்கையில் தண்ணீர் உறிஞ்சும் மோட்டார் மூலம் கிணற்று பாசனம், ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி சாகுபடி நடக்கிறது. ஊரடங்கால் விவசாய பணிகளில் மந்த நிலை நிலவுகிறது. ஊரடங்கு தளர்வையடுத்து நுாறு நாள் வேலைக்கு செல்வதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நாங்களே விவசாய பணிகளை முடித்து விட்டு வெளியில் சுற்றுவதை தவிர்த்து ஊருக்குள்ளே சமூக இடைவெளி விட்டு தாயம் விளையாடுகிறோம். இதனால் வீண் பேச்சு தவிர்க்கப்படுகிறது.கார்த்திக், விவசாயி

கட்டுப்பாட்டை மீறுவதில்லை

ஊரடங்கால் வேலைக்கு செல்ல இயலவில்லை. வெளியில் செல்வதை தவிர்த்து

கிராமத்திலே இருந்துவருகிறேன். பகல் முழுவதும் தாயம் விளையாட்டுநடக்கிறது. அதை

ஆர்வமாக காண்போரில் நானும் ஒருவன். கிராம கட்டுப்பாட்டை யாரும் மீறியது கிடையாது. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வீட்டிற்கு ஒருவர் வெளியில்செல்வர். ஊரடங்கை மீறாமல் இருப்பதால் தான்வரலொட்டியில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கிறது. ஊரடங்கு

கட்டுப்பாடுகளை மீறாமல் இருந்தால் கொரோனாதொற்றை தடுக்க இயலும்.முருகன், தொழிலாளி.

Related posts

Leave a Comment