தமிழகத்தில் மோசமடையும் பாதிப்பு.. மேலும் 3940 பேருக்கு கொரோனா.. 54 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 3940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,443 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 32,948 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 11,10,402 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1079 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53762 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

Leave a Comment