சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. பேஸ்புக்கில் சர்ச்சைப் பதிவு போட்ட போலீஸ்காரர்.. அதிரடி சஸ்பென்ட்!

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரிக்கும் விதமாக பேஸ்புக்கில் பதிவிட்ட சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது .

என்ன சொன்னார் இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரிக்கும் விதமாக போலீசார் ஒருவர் செய்த போஸ்ட் சர்ச்சையாகி உள்ளது. சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து சாத்தன் குளம் சம்பவம் தொடர்பாக பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் டேய் தம்பிகளா வாங்க அடுத்த லாக்அப் டெத்துக்கு ஆள் கிடைச்சுடுச்சு

பேஸ்புக் போஸ்ட் லாக்அப் டெத்துக்கு ஆள் கிடைக்கலைன்னு பார்த்தோம். இப்போது ஆள் கிடைச்சுடுச்சு, என்று குறிப்பிட்டு அதோடு இன்னும் சர்ச்சையாக சில விஷயங்களை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் பெரிய அளவில் வைரலானது. இந்த போஸ்டை பலரும் ஷேர் செய்து அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர்.

நீக்கினார் இந்த நிலையில் தனது பேஸ்புக் போஸ்டை ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து நீக்கி இருந்தார். அதோடு இந்த பதிவு மக்கள் மனதை புண்படுத்தியது என்ற மனவருத்தத்துடன் பதிவிடுகிறேன். மேற்கண்ட இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய பேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். இதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

நீக்கப்பட்டார் என்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று சதீஷ் முத்து விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment