தமிழகம் முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பு? மருத்துவக்குழு உடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் லாக்வுடன் நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. இந்த ஆலோசனைக்கு பின்னர் எத்தனை நாட்கள் தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு என்பது குறித்து முதல்வர் அறிவிக்க உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கி தொடர்ந்து லாக்டவுன் அமலில் உள்ளது. எனினும் கடந்த மே மாதமும் ஜுன் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களும் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மண்டலத்திற்குள் செல்ல இபாஸ் தேவையில்லை, பேருந்துகள் இயக்க அனுமதி, கடைகளை வழக்கம் போல் திறக்க அனுமதி என கிட்டத்திட்ட இயல்பு நிலையை தமிழகம் எட்டியது.

பிற மாவட்டங்களில் ஆனால் சென்னையில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்ததால் பலரும் அச்சப்பட்டு தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வந்தனர். இதனால் கொரோனா பாதிப்பு பிற மாவட்டங்களிலும் பரவலாக அதிகரித்தது. இந்நிலையில் ஜூன் 3வது வாரத்தில் பல மாவட்டங்களில பாதிப்பு கடுமையாக உயர்ந்தது.

ஜூன் 30 வரை இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்தார். இந்த ஊரடங்கு ஜுன் 30 வரை அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இதேபோல் மதரை, தேனி, மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், மண்டலங்களுக்கு இடையிலான, பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு, நாளை நிறைவு பெறுகிறது.

மருத்துவக்குழு உடன் இந்நிலையில் கொரோனா நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு முறையும், ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன், மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார்.

ஒரு மாதம் நீட்டிப்பு? அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் சற்று முன்னதாக மருத்துவக்குழுவினருடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்த தொடங்க உள்ளார். ஊரடங்கை எவ்வளவு நாட்கள் நீட்டிப்பது, எந்த மாவட்டத்திற்கு தளர்வுகளை அறிவிப்பது, எங்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவது என்பதை இக்கூட்டம் முடிந்த பின், முதல்வர் அறிவிப்பார் என தெரிகிறது. தற்போதைய நிலையில் மேலும் ஒரு மாதத்திற்கு, ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் கொரோனா பரவல் கொஞ்சமும் குறையவில்லை. எல்லா மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது

Related posts

Leave a Comment