குடிநீர் தொட்டி, ரேஷன் கடைக்கு அடிக்கல்

சிவகாசி : சிவகாசி பள்ளபட்டி ஊராட்சி பள்ளப்பட்டியில் ரேஷன்கடை, முத்து ராமலிங்கம் காலனி, விவேகானந்தர் காலனி, எம்.ஜி.ஆர்., காலனி, லிங்கபுரம் காலனி மீனாட்சி காலனி பகுதியில் சுகாதார வளாகம், எம்.ஜி.ஆர்., காலனி, காமராஜர் காலனி, மீரா காலனி பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி பணியை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார். விவேகானந்தர் காலனியில் பேவர் பிளாக் ரோடு, தில்லை நகரில் மின்கல வாகனம் நிறுத்தம் இடத்தை துவக்கி வைத்தார். கலெக்டர் கண்ணன், சப் கலெக்டர் தினேஷ்குமார், ஊராட்சி தலைவர் உசிலை செல்வம், நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் சுபாஷினி, பி.டி.ஓ., க்கள் ராமமூர்த்தி, ரவி, ஊராட்சி செயலர் லட்சுமணபெருமாள்சாமி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment