வந்தாலே மனசு லேசு: போலீசார் மனித நேயத்துக்கு மக்கள் பாராட்டு

விருதுநகர் : புகார் கொடுக்க வரும்போது ஆத்திரமும் திரும்பும்போது விருதுநகர் பாண்டியன்நகர் போலீசார் மனித நேயத்தால் மனசு லேசாகுவதாக மக்கள் பாராட்டுகின்றனர்.

விளம்பரம் தேடி கொள்ளாமல் பாராட்டை எதிர்பார்க்காமல் மனித நேயம் காப்பதை தலையாய கடமையாக கருதும் போலீசாரும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்தவகையில் விருதுநகர் பாண்டியன் நகர் (புறநகர்) போலீசார் முன் மாதிரியாக திகழ்கின்றனர். தொற்று பரவாமல் தடுக்க ஸ்டேஷனுக்குள் செல்ல அனுமதி இல்லாத நிலையில் ஸ்டேஷன் முன் மரங்களின் நிழலில் சமூக இடைவெளியுடன் அமர வைத்து புகார் மீது விசாரணை நடத்துகின்றனர்.

கிருமி நாசினி ,குடிநீருக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.பசியோடு வருபவர்களுக்கு டீ, பிஸ்கட் கொடுக்கின்றனர். விசாரணை தாமதமானால் உணவுக்கும் ஏற்பாடு செய்கின்றனர். இதற்கான செலவுகளை போலீசாரே தங்களுக்குள் பங்கிட்டு கொள்கின்றனர். மனித நேயத்துடன் நடத்துவதால் புகார்தாரர்கள் தங்களுக்குள் விட்டு கொடுத்து பிரச்னைக்கு தீர்வு காண்கின்றனர். பிரமிக்க வைத்ததுகுடும்ப பிரச்னை தொடர்பாக பாண்டியன்நகர் போலீசில்புகார் அளித்தேன்.போலீசாரின் கனிவான செயல்பாடு என்னை பிரமிக்க வைத்தது. ஸ்டேஷன் வரும்போது ஆத்திரத்துடன் வந்தேன். திரும்பி செல்லும் போது மனம் லேசானதாக உணர்கிறேன். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சாத்தான்குளம் போன்ற துயரம் சம்பவம் நேராது.சீனிவாசராகவன், தனியார் ஊழியர்சத்திரரெட்டியபட்டி

Related posts

Leave a Comment