தலைவலியை நீக்கும் கனகாம்பரம் பூ

அருப்புக்கோட்டை : தலைவலியை தீர்க்கும் குணம் கொண்ட கனகாம்பரம் பூ விவசாயத்தை அருப்புக்கோட்டை பகுதியான கோணப்பநேந்தல், தமிழ்பாடி, பிள்ளயைார் தொட்டியான்குளம், சித்த லகுண்டு உள்ளிட்ட கிராமங்களில் பாரம்பரியமாக செய்து வருகின்றனர் விவசாயிகள். இப்பகுதி செம்மண் பூமியாக இருப்பதால் கனகாம்பர பூ க்களுக்கு ஏற்றதாக உள்ளது. இந்த பூக்கள் விளைய நிழலான பகுதியே தேவை. இதனால் இதன் ஊடுபயிராக அகத்தி கீரையை பயிரிடுகின்றனர். மரமாக வந்த உடன் இதன் நிழலை பன்படுத்தி கனகாம்பரம் விதைகளை பயிரிடுவர். இவை ஆண்டு தோறும் விளைய கூடியது. குறுஞ்செடி வகையான இது தென்னிந்தியா, இலங்கை, மலேசியா பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இளஞ்சிவப்பு, காவி கலரில் பூக்கும்இதை தலையில் சூடுவதால் தலைவலி, ஒற்றை தலைவலி பறந்து போய் விடும்.கனகாம்பரத்தை மாலையாக அணியும் போது உடலும் பலம் பெறுவதோடு ஒருவித மகிழ்ச்சி ஏற்படுகிறது. மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்து கட்டவும் வழிபாட்டிற்கும் இந்த பூக்கள் பயன்படுகின்றன.இதனால் இந்த பூக்களுக்கு எப்போதுமே தனி ‘மவுசு’ தான் என்கின்றனர் விவசாயிகள்.

Related posts

Leave a Comment