அறிவித்தும் வராத மினரல் வாட்டர் பிளான்ட்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாததால் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட மினரல் வாட்டர் பிளான்ட் திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கிறது.

கடந்த 2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் உள்ளாட்சி அமைப்புகளில் பாதுகாக்கபட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு வார்டு தோறும் மினரல் வாட்டர் பிளான்ட்கள் அமைத்து 20 லிட்டர் குடிநீர் ரூ.7 க்கு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிவிக்கபட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளிலும் பிளாண்ட் அமைக்க முடிவு செய்யபட்டு முதல்கட்டமாக ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் செல்லும் பாதை , பெரியமாரியம்மன் கோயில் மேற்கு பகுதியில் அமைக்கபட்டது.

ஆண்டாள் கோயில் ரோட்டில் உள்ள பிளான்ட் செயல்பாட்டில் உள்ளது. பெரியமாரியம்மன் கோயில் மேற்கு பகுதி பிளான்ட் மின் இணைப்பு கொடுக்காததால் செயல்பாட்டிற்கு வரவில்லை.பல மாதங்களாக இதேநிலை தொடர்வதால் மற்ற வார்டுகளிலும் மினரல் வாட்டர் பிளான்ட் அமைக்கபடவில்லை. ஏற்கனவே நகரில் குடிநீர் தட்டுபாடு நிலவும் சூழலில் இத்திட்டமே முடங்கி கிடக்கிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துாரில் குடிநீர் தட்டுபாடு என்பது பல ஆண்டுகளாக தொடர்கிறது.

Related posts

Leave a Comment