அஜாக்கிரதை! முகக்கவசம், கையுரை அணியாத வியாபாரிகள்

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வியாபாரிகள் முகக் கவசமின்றியும் கையுறை அணியாமல் பொருட்களை விற்பனை செய்வது தொடர்கிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதால் தொற்றும் வேகமாக பரவுகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முகக் கவசம் அனைவரும் அணியவேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக வியாபாரிகள் கட்டாயம் அணிய வேண்டும். இவர்கள்தான் தினமும் நூற்றுக்கணக்கான மக்களை சந்திக்கின்றனர். காய்கறிகள், பழங்கள், அரிசி , சர்க்கரை உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் பல்வேறு நகர்களில் இருந்து பலர் கைமாறி கடைகளை வந்தடைகிறது. இதனால் இவற்றில் கொரோனா வைரஸ் தொற்று படிந்திருக்கும் அபாயம் உள்ளது. அனைத்து வியாபாரிகளும் தாங்களாக முன் வந்து கையுறை, முகக் கவசம் அணிந்து பொருட்களை விற்பனை செய்ய முன்வர வேண்டும்.

கடைகளில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்வதும் வியாபாரிகளின் பொறுப்பே. வாடிக்கையாளர்கள் கைகளை சுத்தம் செய்து கொள்ள சானிடைசர் போன்ற வசதி செய்து தருவது காலத்தின் கட்டாயம்.அதே நேரத்தில் இதை அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை.

இவர்களும் முறையாக கண்காணித்தாலே இப்பிரச்வைக்கு தீர்வு கிடைக்கும்.ஆனால் இவர்கள் பரவல் அதிகரித்தும் எதையும் கண்டுக்காது ஒதுங்குகின்றனர்………

முடுக்கிவிடுங்க

வியாபாரிகள் முன்எச்சரிக்கையாக முகக்கவசம், கையுறை அணிந்து பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பொதுமக்களும் விழிப்புணர்வு அடைவார்கள். ஆனால் இவர்களே எதையும் அணியாது வியாபாரம் பார்க்கின்றனர். ஊரடங்கு துவக்கத்தில் இதன் மீது ஆர்வம் காட்டிய அதிகாரிகளும் தற்போது எதையும் கண்டுக்காது உள்ளனர். இதுவே பரவலுக்கும் ஒரு காரணமாகிறது.மாவட்ட நிர்வாகம்தான் கண்காணிப்பை முடுக்கிவிட வேண்டும். ஆன் லைன் ஆர்டர் பெற்று டோர் டெலிவரி வழங்குவதும் தொற்று பரவலை தடுக்கும்.என்றார்.

-பாலு, விவசாயி, சாத்துார்

Related posts

Leave a Comment