மரத்தை வெட்ட டெண்டர்; இயற்கை ஆர்வலர்கள் கொதிப்பு

விருதுநகர் : விருதுநகர் சிவகாசி ரோட்டில் எந்த பாதிப்பின்றி உள்ள புளிய மரத்தை வெட்ட தனியார் பெட்ரோல் பங்கிற்காக நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விட்டுள்ளது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு வனத்துறை மதிப்பீடு செய்துள்ள நிலையில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ.,கூடுதல் பொறுப்பு வகிக்கும் சிவகாசி சப் கலெக்டர் தினேஷ் அனுமதி அளித்து உள்ளார். போக்குவரத்துக்கு எவ்வித இடையூறு இல்லாத மரத்தை வெட்ட இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 8 மாதங்களுக்கு முன்பு இதே ரோடு விரிவாக்கம் போது கூட வெட்டாத மரத்தை தற்போது வெட்டுவது ஏன் என கோள்வி எழுந்துள்ளது.

Related posts

Leave a Comment