அடுத்தடுத்து டெலிட் செய்யப்பட்ட போஸ்ட்கள்.. சீனாவின் வெய்போவில் இருந்து வெளியேறும் மோடி.. திருப்பம்!

பெய்ஜிங்: சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் (Weibo) இருந்து வெளியேறும் முடிவை பிரதமர் மோடி எடுத்து இருக்கிறார். அவரின் வெய்போ (Weibo)கணக்கில் இன்று ஏற்பட்ட மாற்றங்கள் இதை உறுதி செய்துள்ளது. இந்தியா சீனா இடையே ராணுவ ரீதியான மோதலை தொடர்ந்து தற்போது பொருளாதார, தொழில்நுட்ப ரீதியாகவும் மோதல் ஏற்பட்டடுள்ளது. சீனாவிற்கு சொந்தமான 59 செயலிகளை மத்திய அரசு நேற்று முதல்நாள் தடை செய்தது. டிக்டாக் – TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் – UC Browser, ஹெலோ – Helo, எம்ஐ கம்யூனிட்டி – Mi Community, செண்டர் – Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. சீனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த செயலிகள் தடை செய்யப்பட்டது. என்ன நடந்தது இந்த நிலையில் தற்போது சீனாவின் பிரபல…

Read More

டெல்லி அரசு பங்களாவை உடனடியாக காலி செய்யுங்கள்.. பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு!

டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு (Special Protection Group) கடந்த வருடம் நீக்கப்பட்டது. இந்த நிலையில் பிரியங்கா காந்தி டெல்லியில் வசித்து வந்த அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு மத்திய அரசு அவருக்கு உத்தரவிட்டுள்ளது. எஸ்பிஜி பாதுகாப்புக்கு கீழ் பிரியங்கா காந்தி இருந்த நிலையில் அவருக்கு டெல்லியில் லுடியென்ஸ் பகுதியில் மத்திய அரசு சார்பாக அரசு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வீடு எண் 35 சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. 1997 பிப்ரவரியில் இந்த வீடு சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்டது. இதில் பிரியங்கா…

Read More

ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிந்தது.. விடை பெறும் ஷஷான்க் மனோகர்.. அடுத்த தலைவர் கங்குலி

துபாய் : பதவிக் காலம் முடிவடைந்து ஐசிசி தலைவர் பொறுப்பில் இருந்து ஷஷான்க் மனோகர் விடை பெற்றார். இவர் முன்னாள் பிசிசிஐ தலைவராகவும் இருந்தவர். இரண்டு முறை ஐசிசி தலைவர் பொறுப்பில் தொடர்ந்து இருந்தார். அடுத்த ஐசிசி தலைவரை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை. அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் கடும் நஷ்டத்தில் உள்ளன. அதனால் அனைத்து அணிகளும் கிரிக்கெட் போட்டிகளை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பிசிசிஐ திட்டம் பிசிசிஐ விரைவில் ஐபிஎல் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டு உள்ளது. ஐபிஎல் தொடரை செப்டம்பர் – அக்டோபர் மாதத்திலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நவம்பரில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. குடைச்சல் கடந்த நான்கு…

Read More

ஸ்கிரீன் ஷாட், பாஸ்வேர்டு முதல் அனைத்தையும் கறந்துவிடும்.. கூகுள் குரோம் எக்ஸ்டன்சன்கள்.. கவனம்!

டெல்லி: இணையதளத்தை பயன்படுத்துவோர் கூகிள் குரோம் நீட்டிப்புகளை இன்ஸ்டால் செய்யும் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகளை, “முக்கியமாக” பயன்படுத்துவோரின் தரவை சேகரிப்பதைக் கண்டறிந்த பின்னர் அவற்றை நீக்கியுள்ளது. இந்த தகவலை நாட்டின் இணைய பாதுகாப்பு நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. பொதுவாக இந்த கூகுள் குரோம் நீட்டிப்புகள், வலைத் தேடல்களை மேம்படுத்துவதற்கான கருவிகளாக பார்க்கப்படுகிறது. வீடியோவை டவுன்லோடு செய்வதற்கு உள்பட பல்வேறு விஷயங்களை செய்வதற்காக கூகுள் குரோம் நீட்டிப்புகள் உள்ளன. சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், இந்திய சைபர் இடத்தைப் பாதுகாப்பதற்கும் தேசிய தொழில்நுட்பக் குழுவான கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி-இன்) செயல்படுகிறது. இந்த அமைப்பு பல கூகுள் குரோம் நீட்டிப்புகளில், கூகிள் குரோம் வலை அங்காடி பாதுகாப்பு ஸ்கேன்களைத் தவிர்ப்பதற்கான குறியீடு…

Read More

என்எல்சி வெடி விபத்தில் 6 பேர் மரணம் – உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

சென்னை: என்என்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சி அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொதிகலன் வெடி விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டேன். காயமடைந்து மருத்துவமனையில்…

Read More

சிறப்பான ஐபிஎல் அணி… ஏபி டீ வில்லியர்ஸ் வெளியீடு… தோனிதான் எப்பவுமே ‘தல’

டெல்லி : சிறந்த ஐபிஎல் அணியை தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் அவர் தேர்வு செய்துள்ளது எம்எஸ் தோனியைதான். மேலும் அந்த அணியில் வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மேலும் தான் உருவாக்கியுள்ள அந்த அணியில் விராட் கோலியை 3வது இடத்திலும் தன்னை 4வது இடத்திலும் களமிறக்கியுள்ளார் வில்லியர்ஸ். அக்டோபரில் நடத்தப்படுமா? கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் சீசன் 2020, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த போட்டிகள் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டால், ஐபிஎல் அந்த அட்டவணையில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

Read More

சீனாவின் அதே யுக்தி.. இந்தியா கொடுத்த நச் பதிலடி.. பிற நாடுகளும் அணி சேர வாய்ப்பு.. இனிதான் ஆட்டம்

டெல்லி: அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எப்படி சீனா கையாண்டதோ அதேபோல சீன நிறுவனங்களை இந்தியா கையாள ஆரம்பித்துள்ளது. இது பிற நாடுகளுக்கும் சீனாவுக்கு எதிரான உத்வேகத்தை கொடுக்க வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் சீனா, கூகுள் மற்றும் பேஸ்புக் இல்லாத ஒரு மாற்று ஆன்லைன் பிளாட்பார்மை திட்டமிட்டு உருவாக்கியது. இப்போது அதன் நிறுவனங்கள், இந்தியாவின் ஆக்ரோஷத்தால் நிலைதடுமாறி நிற்கின்றன. சீனாவின் மிகப்பெரிய, 59 செல்போன் செயலிகளை தடை செய்வதான, இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத இந்த முடிவு, சீன நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. சீனாவின் தந்திரம் பல ஆண்டுகளாக சீன அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட கெடுபிடிகளுக்கு பின்னால் செழித்து வளர்ந்தவை இந்த நிறுவனங்கள். அமெரிக்காவின் பிரபலமான இணையதளங்கள் பலவற்றுக்கு சீனா தடை விதித்திருந்தது. இப்போது, அதே சுவையை சீனாவுக்கு இந்தியா காண்பித்துள்ளது. அதிலும்,…

Read More

மக்கள் நலனுக்காக.. களப் பணியாற்றும் டாக்டர்களை வணங்குவோம்!

சென்னை: தெய்வத்தை நேரில் கண்டதில்லை நாம் மருத்துவர்களின் வடிவில் தான் காண்கிறோம். மக்களின் உயிர்களைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றனர் மருத்துவர்கள். நேரம் காலம் பாரக்காமல் நோயின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதில் வல்லவர்கள். இன்று உலகம் முழுவதும் மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நோயின் பிடியிலிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் இருபத்திநான்கு மணி நேரமும் போராடி வருகின்றனர். தன் குடும்பத்தைப் பிரிந்து மக்கள் நலனுக்காகப் பாடுபடும் மருத்துவர்களைப் போற்றுங்கள். தன்னுயிரையும் துச்சமென எண்ணி நம் உயிரைக் காக்கும் போராளிகள் அவர்கள். நோயின் தாக்கத்தை உணர்ந்து சிகிச்சையளிப்பதில் வல்லவர்கள். நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும் மக்களிடம் கூறுகிறார்கள் மருத்துவர்கள். தியாக உள்ளம் கொண்டவர்கள் மருத்துவர்கள். மருத்துவரான பி சி ராய் அவர்களின் நினைவு தினத்தை தான் நாம் மருத்துவர் தினமாகக் கொண்டாடுகிறோம்.…

Read More

Coronavirus in India Live:

சென்னை: தமிழகத்தில் மேலும் 3,882 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 2,182 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 3 வது நாளாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது பாதிப்பு. சென்னையில் மொத்த பாதிப்பு 60,533 என்ற அளவில் உள்ளது.

Read More