அல்சருக்கு மருந்தாகும் அகத்திக்கீரை

விருதுநகர் :விருதுநகர் மாவட்டத்தில் ஆடிப்பட்டம், மாசிப்பட்டத்தை நடவு காலமாக தேர்வு செய்கின்றனர். மானாவாரி பயிரிடுபவர்கள் பெரும்பாலும் ஆடிப்பட்டத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் கோடை காலத்திற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு விடுகிறது.

அடுத்த நடவுக்கு தயாராகும் முன் கோடை உழவு செய்வதும் அவசியமாவதால் சிறு பயிர்களை நட்டு லாபம் பார்க்கின்றனர். அந்த வகையில் விருது நகர் வட மலைக்குறிச்சி அழகர் சாமி அகத்திக்கீரையை நடவு செய்து வளர்க்கிறார். இது நடவு செய்த 30 நாட்களில் பலன் தர துவங்குகிறது.

கிணற்று நீர் பாசனம் மூலம் 20 சென்டில் 600க்கு மேற்பட்ட அகத்தி மரங்களை வளர்க்கிறார். 25 அடி உயரம் வளரும் இம்மரங்களின் கீரைகள் அல்சர் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. இப்பயிர்களை பயிரிடுவோர் நஷ்டமடையாமல் இருப்பதுடன், அவர்களை விவசாய தொழிலில் இருந்து வெளியேறுவதையும் தவிர்க்கிறது.

உடலுக்கு வலு சேர்க்கும் கீரை

அகத்திக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கும் இளைஞர்கள் பலர்அகத்திக்கீரையை நாடுகின்றனர். பொதுவாகவே கீரை வகைகள் உடலுக்கு வலு சேர்ப்பவை. கோடை உழவின் போது இவ்வாறு சிறு பயிர்களை பயிரிடுவது சிறு விவசாயிகளுக்கு லாபம் தான்.அழகர்சாமி, விவசாயி.

Related posts

Leave a Comment