செய்திகள் சில வரிகளில்…விருதுநகர்

கொரோனா அறிய கூடுதல் கருவி

விருதுநகர்:- விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக கொரோனா கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். கருவியை சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரி வழங்கியது. ஏற்கனவே ஒரு கருவி உள்ள நிலையில் கூடுதலாக 280 என தினமும் 560 பேருக்கு சோதனை முடிவுகள் கிடைக்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

ராஜபாளையம்: ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக

பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ரூ. 1000 நிதி உதவி வழங்கப்பட்டது. கலெக்டர் கண்ணன் தொடங்கி வைத்தார். சமூக பாதுகாபபு தனி தாசில்தார் முத்துலட்சுமி,தாசில்தார்கள் ஆனந்தராஜ், ராமச்சந்திரன், பரமானந்தராஜா உடன் இருந்தனர்.

விதி மீறியவர்களுக்கு அபராதம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடந்து சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது.செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் சோதனை நடத்தியதில் 30 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கபட்டது.

ஆர்ப்பாட்டம்வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி தலைமை வகித்தார்.

Related posts

Leave a Comment