நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து – 5 பேர் பலி

நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை ஷிப்டில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை தேடி வருகின்றனர். தீயை அணைக்கும் பணியில் தீ அணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

இரண்டாம் அனல் மின்நிலையத்தில் 7ஆம் அலகுகள் மூலம் 1470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment