போலீஸ் செய்திகள்: விருதுநகர்

குழந்தைகளுடன் தாய் மாயம்சிவகாசி: இ.பி., காலனி பாட்சா மனைவி தேன் மொழி 30. ரூ. 85 ஆயிரத்துடன் இரு குழந்தை

களுடன் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலி

சிவகாசி: சேணையாபுரம் காலனியை சேர்ந்த மருதுபாண்டி மனைவி பத்திரக்காளி 60. நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அதிகளவில் மாத்திரை சாப்பிட்டு இறந்தார். சிவகாசி கிழக்கு

போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி திருடியவர் கைது

சிவகாசி:சிவானந்தம் நகரை சேர்ந்தவர் சண்முகராஜன். இவரது லாரியை சிவகாசி புதுத்தெரு பாலசுப்பிரமணியன் 26, திருடி சென்றார். வழியில் சேதமடைந்த நிலையில் ரயில்வே

ஸ்டேஷன் அருகே நிறுத்தி விட்டு தப்பினார். டவுன் போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியை ஏமாற்றி செயின் பறிப்பு

ராஜபாளையம்: ஒய்யம்புளி தெரு கிருஷ்ணமராஜா மனைவி கோமதி 65. டூவீலரில் வந்த

இருவர் போலீஸ் என கூறி செயினை அறுத்து விடுவார்கள் கழற்றி தாருங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம் என்றனர். ஏழரை பவுன் செயினை கொடுத்துள்ளார். வீட்டில் வந்து

பார்க்கும் போது கற்கள் இருந்துள்ளது.

Related posts

Leave a Comment