காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குல்.. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூர் நகரில் ரோந்து பணியில் இருந்து சிஆர்பிஎப் (Central Reserve Police Force) படை வீரர்களை குறிவைத்து தீவிராவதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்தார். இதில் அப்பாவி முதியவர் ஒருவரும் கொல்லப்பட்டார். அதில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர், ஒரு வீருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. வடக்கு காஷ்மீரில் உள்ள சோபூரில் உள்ள ரெபன் மாடல் டவுனில் இன்று காலை ரோந்து பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் திடீரென சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.. சி.ஆர்.பி.எஃப் (CRPF) இன் 183 வது படைப்பிரிவின் வீரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்தனர். கடும் சண்டைக்கு பின்னர் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சண்டையில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். முதியவர் ஒருவரும் இறந்தார். அவருடன் இருந்த 3 வயது சிறுவனை தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட முதியவர் முஸ்தபா காலனி எச்எம்டி நகரத்தில் வசிக்கும் பஷீர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related posts

Leave a Comment