மோடி காட்டிய வழி.. சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிரடி தடை.. அமெரிக்கா ஆக்சன்!

நியூயார்க்: இந்தியாவில் சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க தொடங்கி உள்ளது.

சீனாவிற்கு எதிராக உலகின் முன்னணி நாடுகள் களமிறங்க தொடங்கி உள்ளது. அதிலும் இந்தியா,அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளது. இதன் விளைவாக டிக்டாக் – TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் – UC Browser, ஹெலோ – Helo, எம்ஐ கம்யூனிட்டி – Mi Community, செண்டர் – Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது.

அமெரிக்கா எப்படி இந்த நிலையில் தற்போது சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்க தொடங்கி உள்ளது. அதன்படி அமெரிக்காவில் தற்போது ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் (ZTE Cor) ஆகிய நிறுவனங்களின் பொருட்களுக்கு, சேவைகளுக்கு, தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை யாரும் பயன்படுத்த கூடாது என்று மற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன கட்டுப்பாடு அமெரிக்காவின் தொலைத்தொடர்பு கமிஷன் எனப்படும் United States Federal Communications Commission இந்த தடையை விதித்து இருக்கிறது. அதன்படி இந்த இரண்டு நிறுவனங்களின் சேவையை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது. அவர்களின் எலக்ட்ரானிக் பாகங்கள் எதையும் தங்கள் சாதனங்களில் பயன்படுத்த கூடாது. அந்த நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசின் 8.3 பில்லியன் டாலர் நிதியை அளிக்க முடியாது.

மொத்தமாக நீக்க வேண்டும் இந்த இரண்டு நிறுவனங்களின் சேவைகளை, தயாரிப்புகளை அமெரிக்கா நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் நிறுவனத்தில் பயன்படுத்தி இருந்தால் அதை நீக்க வேண்டும். அதிக தாமதம் செய்யாமல் உடனே அதை நீக்க வேண்டும் என்று சீனாவின் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா கொந்தளித்து உள்ளது. அமெரிக்காவில் இருக்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

என்ன காரணம் இதற்கு தற்போது அமெரிக்க அரசு காரணமும் தெரிவித்து உள்ளது. அதில் ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் (ZTE Cor) ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டுள்ளது. தகவல் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் தொலைத்தொடர்பு துறை பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

அனுமதிக்க முடியாது அமெரிக்காவின் தொலைத்தொடர்பு துறையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மூக்கை நுழைப்பதை ஏற்க முடியாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இந்த ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் (ZTE Cor) ஆகிய நிறுவனங்கள் சீனாவின் அரசுக்கு மிகவும் நெருக்கமான நிறுவனங்கள் ஆகும். அந்நாட்டு அரசுக்கு இந்த நிறுவனங்கள் கைப்பாவை போலவே செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல நாள் கோபம் அதிலும் ஹுவாவே டெக்னலாஜி (Huawei Technologies) மீது அமெரிக்கா பல நாட்களாக கோபத்தில் இருந்தது. அந்த நிறுவனத்தின் பொருட்கள் மீது ஏற்கனவே அமெரிக்கா அதிக வரி விதித்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது மொத்தமாக அதன் உடன் தொடர்பை துண்டிக்க அமெரிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் சீன செயலிகள் தடை செய்யப்பட்ட பின் உலக நாடுகளும் அதை பின்பற்ற வாய்ப்புள்ளது என்று கூறினார்கள். தற்போது அதேபோல் அமெரிக்கா இந்தியாவை பின்பற்றி வருகிறது.

Related posts

Leave a Comment