இடைத்தரகர்கள் என்பது இல்லவே இல்லை

* வேளாண்துறையில் நம் துறையின் பங்கு என்ன?

விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்கள் இடைத்தரகர்களால் குறைந்த விலைக்கு விலைபோகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் வணிக செயல்திட்ட மேம்பாடுகளை ஊக்குவிப்பதே இத்துறையின் பணி

* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பற்றி?

15 முதல் 20 விவசாயிகள் இணைந்து உழவர் ஆர்வலர் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.

5 உழவர் ஆர்வலர் குழுக்கள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் குழு உருவாக்கப்படுகிறது.

10 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் இணைந்து ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்படுகிறது. கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு விவசாயிடமும் இருந்து ரூ.1000 பங்கு தொகை என ரூ.10 லட்சம் வசூலிக்கப்பட்டு ஆதார நிதியாக கம்பெனி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

*மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை?

தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு கீழ் 8 நிறுவனங்களும், நபார்டு வங்கி உதவியுடன் 12 நிறுவனங்களும், சுயமாக 2 நிறுவனங்கள் என மாவட்டத்தில் 22 உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் இயங்குகின்றன.

*நிறுவனங்களுக்கு துறை சார்பில் செய்யப்படும் உதவிகள்?

ஆதார நிறுவனங்கள் அதாவது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் தொழில்நுட்பம், வணிக செயல்பாடுகள் குறித்த தனித்திறன் பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

* நிறுவனங்களால் விவசாயிகள் பெறும் பயன்?

சாகுபடி செய்யப்படும் விளைபொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுவ தால் இடைதரகர்கள் தவிர்க்கப்படுகின்றனர். மதிப்பு கூட்டி

விற்பனை செய்வதால் விவசாயிகள் லாபம் பெறுகின்றனர்.

* வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிறுவனம்?

விருதை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து சிறுதானியம், பயிறு வகைகளை அதிக விலைக்கு கொள்முதல் செய்து விருதை அக்ரோ புட்ஸ் என்ற பெயரில் 40க்கு மேற்பட்ட சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இதன் மூலம் இந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு முதல்வர் விருது பெற்றுள்ளது ..

* அரசு அளிக்கும் புதிய திட்டங்கள்?

ரூ.10 லட்சம் பங்கு தொகை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தில் செயல்பாடுகளை மத்திய அரசு ஆய்வு செய்து ரூ.10 முதல் 15 லட்சம் வரை சமபங்கு நிதியாக மானியம் வழங்கப்படுகிறது.

* நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் என்றால் என்ன?

இத்திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு பயிர் உடைக்கும் இயந்திரங்கள், சுத்திகரிப்பு இயந்திரங்கள், எண்ணெய் உற்பத்தி இயந்திரங்கள், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதிப்பு கூட்டு இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் 11 நிறுவனங்களக்கு

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* விதை மற்றும் நடவு பெருக்க திட்டம் பற்றி?

கிட்டங்கியுடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் ரூ.60 லட்சம் மதிப்பில் அமைத்து தரப்படுகிறது. மாவட்டத்தில் 4 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் நிறுவன குழு உறுப்பினர்களே விதைகளை உற்பத்தி செய்வதற்கும் சான்று பெற்ற விதைகளை பிறரிடம் விற்கவும் முடிகிறது

* துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள்?

உற்பத்தி செய்த வேளாண் விளைபொருட்களுக்கு அக்மார்க் வழங்கப்படுகிறது. விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்குழு வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட அக்மார்க் ஆய்வகத்தை அணுகலாம். இது தவிர 8 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

* விவசாயிகளுக்கு கூற விரும்பும் அறிவுரை?

மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக அரசிடம் பாராட்டு பெற்றுள்ளது. இத்திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பெருக வேண்டும். உற்பத்தி செய்த பொருட்களை மதிப்பு கூட்டி விற்பதே விவசாயத்தை மேம்படுத்தும்,என்றார்.

Related posts

Leave a Comment