கட்டட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

சிவகாசி:சிவகாசி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம் ஊராட்சிகளில் பல்வேறு கட்டட பணிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அடிக்கல் நாட்டினார்.

ஆனையூர் அய்யம்பட்டி, சித்துராஜபுரம் அய்யனார் காலனி, கீழூர், விஸ்வநத்தம் சிவகாமிபுரம் காலனியில் ரேஷன் கடை, முனீஸ்வரன் காலனியில் சுகாதார வளாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திட்ட அலுவலர் சுரேஷ், பி.டி.ஓ., க்கள் ராமமூர்த்தி, ரவி, ஊராட்சி தலைவர்கள் லீலாவதிசுப்புராஜ்(சித்துராஜபுரம்) நாகராஜ் (விஸ்வநத்தம்) லட்சுமி நாராயணன் (ஆனையூர்) மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, ஊராட்சி செயலர்கள் நாகராஜ், செல்வம், அருள்ராஜ், அ.தி.மு.க., நிர்வாகிகள் கருப்பசாமி, சுப்பிரமணியன், பாலாஜி, கார்த்தி, கருப்பு கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment