நாட்டு மக்களிடையே கொரோனா பற்றி மெத்தனம் அதிகரிப்பு.. உஷாராக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி எச்சரிக்கை

டெல்லி: ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது முதல் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து வருகிறது, இனிமேல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவர் முக்கியமான சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.

அவர் கூறியதை பாருங்கள்: நாம் இப்போது அன்லாக் 2 என்ற கட்டத்தில் நுழைந்து உள்ளோம். படிப்படியாக ஊரடங்கு உத்தரவு தளர்வு கொடுக்கப்பட்டு இப்போது இன்னும் அதிக தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன. பருவ மழைக்காலம் என்பதால் காய்ச்சல் மற்றும் சளி போன்றவைகள் இப்போது அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பிற நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் நிலைமை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. அன்லாக் 2 காலகட்டம் இப்போது ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மக்களிடம் சமீப காலமாகவே, எச்சரிக்கை உணர்வு குறைந்து வருகிறது. கொரோனா விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது.

தனிப்பட்ட மற்றும் சமூக அளவில் மக்களிடையே இப்போது மெத்தன போக்கு அதிகரித்துள்ளது. முன்பு மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். இரண்டு யார்டு இடைவெளி விட்டனர், முகக் கவசங்கள் அணிந்தனர், ஒரு நாளைக்கு பலமுறை கை கழுவினார். இப்போது அது குறைந்து வருகிறது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் வென்று காட்ட வேண்டும். இவரை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

Related posts

Leave a Comment