யோகாவில் ‘லாபிங் தெரபி’
யோகா கலையில் சிரிப்பு தனி முத்திரை பதிக்கிறது. ஆங்கிலத்தில் ‘லாபிங் தெரபி’ என்பர். இரு கைகளை முன் பக்கம் நீட்டி சிரித்து கொண்டே தட்டுவதால் கைகளில் நரம்புகள் துாண்டப்பட்டு ரத்த ஓட்டம் சீரடையும். பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற எதாவது ஒரு ஆசனத்தில் அமர்ந்து கூட்டாக அனைவரும் உரக்க சிரிப்பதால் முக இறுக்கம் குறையும். முகம் தேஜஸ் பெறும். நரம்புகள் துாண்டப்படும். கண் நரம்புகள் நன்கு இயங்கும். மனம் அமைதி பெறும்.
– சங்கரபாண்டியன்,
யோகா ஆசிரியர், விருதுநகர்