பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரனுக்கு கொரோனா- மனைவி, மகனுக்கும் பாதிப்பு!

ராமநாதபுரம்: பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சதன் பிரபாகரன் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி உச்சமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம், டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் அமைச்சர் அன்பழகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிவித்தது. அதிமுகவின் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ .பழனி, அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதியானது. இந்நிலையில் அதிமுகவின் பரமக்குடி தொகுதி எம்.எல்.ஏ . சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சதன் பிரபாகரனின் நண்பர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதியானது. அவரது மனைவி, மகன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதும் உறுதியானது.

Related posts

Leave a Comment