Astrology News

அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள்

மேஷம்
வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை. முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : மந்தத்தன்மை உண்டாகும்.
பரணி : நிதானம் தேவை.
கிருத்திகை : உதவிகள் காலதாமதமாகும்.

ரிஷபம்
தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் வந்து போகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : தடங்கல்கள் வந்து போகும்.

மிதுனம்
பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவாதிரை : எண்ணங்கள் மேலோங்கும்.
புனர்பூசம் : முடிவுகள் சாதகமாகும்.

கடகம்
நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

சிம்மம்
தாயாரின் ஆதரவு கிடைக்கும். வாகனப் பராமரிப்பு செலவுகள் உண்டாகும். பணியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். சொத்து விவகாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் யாவும் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : செலவுகள் உண்டாகும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : பிரச்சனைகள் தீரும்.

கன்னி
நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வாகனப் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
சித்திரை : அனுபவம் உண்டாகும்.

துலாம்
பணியில் மந்தத்தன்மையால் காலதாமதம் உண்டாகும். புதிய முயற்சிகளால் சுபவிரயம் ஏற்படும். பயணங்களால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : சுபவிரயம் ஏற்படும்.
சுவாதி : புதிய நட்பு கிடைக்கும்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.

விருச்சகம்
நுட்பங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனைவிவழி உறவுகளால் மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
அனுஷம் : மனச்சோர்வு உண்டாகும்.
கேட்டை : மேன்மையான நாள்.

தனுசு
புதிய இலக்கை நிர்ணயித்து செயல்படுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் இலாபம் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும். தடைபட்ட காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : ஆலோசனைகளை கேட்கவும்.
உத்திராடம் : அறிவுகள் மேம்படும்.

மகரம்
எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் தொழில் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.

கும்பம்
நீண்ட நாள் எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான நுட்பமான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த செயல்களை பல்வேறு தடைகளை கடந்து செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : தைரியம் உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.

மீனம்
அரசியல் பிரமுகர்களுக்கு பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணி சம்பந்தமாக புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
உத்திரட்டாதி : உறவுகள் மேம்படும்.
ரேவதி : ஆதரவான நாள்.

Related posts

Leave a Comment