மரங்களில் ‘கார்விங் டிசைன்’: அசத்தும் பொறியியல் பட்டதாரி

விருதுநகர்:கல்லுாரி படித்து முடித்த பின் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தான் ஒவ்வொரு இளைஞனின் முதல் கேள்வியாக உள்ளது. சிலருக்கு அரசு பணி, சிலருக்கு கலை பணியில் நாட்டம். வெகு சிலரே சுய தொழிலை துவங்குகின்றனர். இதிலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே சாதித்து வருகின்றனர்.

அந்த வகையில் மரத்தை கார்விங் செய்யும் தொழிலை தேர்வு செய்துள்ள இளம் பொறியியல் பட்டதாரி ஆனந்த விக்னேஷ். விருதுநகரை சேர்ந்த இவர் கதவு, ஜன்னல் ஆகியவற்றை ‘வுடன் கார்விங்’ முறையில் ரூட்டர் இயந்திரம் மூலம் வாடிக்கையாளர் விரும்பும் விதத்தில் டிசைன் செய்து கொடுக்கிறார்.

‘என்கிரேவிங்’ முறையில் நேசத்திற்குரிவர்களின் படங்களை மரத்தில் பொறித்து வாழ்த்துக்கள் அடங்கிய வாசககம் எழுதி விற்பனை செய்கிறார். அலுமினியத்தில் ‘ஜெயில் கட்டிங்’ முறையில் டிசைனும் செய்து கொடுக்கிறார். இதோடு ‘3டி’ மர சிற்பங்களையும் செய்கிறார். என்கிரேவிங் முறையில் செய்யப்படும் பரிசு பொருட்கள் ரூ.300ல் துவங்கி ரூ.1000 வரை விற்கப்படுகிறது.’3டி’ மரசிற்பங்கள் ரூ.6000ல் துவங்கி விற்பனையாகிறது. தலைவாசல், ஜன்னல் கதவுகள் அளவீடுகள், மரத்தின் தரத்தை பொறுத்து விலை மாறுபடுகிறது. கார்விங் முறையில் மரத்தை செதுக்குவது இயல்பானது என்றாலும் பரிசு பொருட்கள், 3டி மரசிற்பங்கள் என்பது சற்று வித்தியாசமாக உள்ளது.

Related posts

Leave a Comment