வறட்சியை வளமாக்கும் மரக்கன்றுகள்: அரிய முயற்சியில் வனவியல் மையம்

ஸ்ரீவில்லிபுத்துார்:வறண்ட விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்கிட ஒரு லட்சம் மரக்கன்றுகள், மூலிகை செடிகளை வளர்த்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு சப்ளை செய்து வருகிறது

ஸ்ரீவில்லிபுத்துார் வனவியல் விரிவாக்க மையம். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியை தவிர மற்ற பகுதிகள் வறண்டு, பசுமையில்லாமல் காணப்படும் நிலையில் இதை மாற்றி பசுமை சூழலை உருவாக்க கடந்த நிதியாண்டில் சிறப்பு திட்டம் அறிவிக்கபட்டது. அதன்படி விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இங்கு பல்வேறு மரக்கன்றுகள் ,செடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தேக்கு, புளி, வேம்பு, இலவம், கொடுக்காபுளி, பூவரசு, நாவல், கொய்யா, எலுமிச்சை, மாதுளை, சீதா, நெல்லி, நொச்சி, பிரண்டை, நந்தியாவட்டை, செம்பருத்தி, ஓமவல்லி என பலவகை கன்றுகள் இங்குள்ளன. திருமணம், பிறந்தநாள் மற்றும் சமூகநலப்பணிகளுக்கு வாங்கி பரிசளித்து வருகின்றனர். இதை முறையாக நட்டு வளர்த்தால் வறண்ட மாவட்டமான விருதுநகர் வளமான மாவட்டமாக மாறும் எந்த ஐயமும் இல்லை. மரக்கன்று தேவைக்கு 99942 73564, 94439 22691 ல் தொடர்பு கொள்ளலாம்.

Related posts

Leave a Comment