விராட் கோலியோட ஒழுக்கத்த இளம் வீரர்கள் எல்லாரும் கத்துக்கணும்… சஞ்சு சாம்சன்

டெல்லி : விராட் கோலியின் ஒழுக்கத்தை, நேரம் தவறாமையை அனைத்து இளம் வீரர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். தனக்கு மட்டுமின்றி அணியின் அனைத்து இளம் வீரர்களுக்கும் ரோல் மாடலாக விராட் கோலி விளங்குவதாகவும் சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார். மேலும் டிரஸ்ஸிங் ரூமில் அனைத்து வீரர்களும் உற்சாகத்துடன் இருக்க கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் உதவி புரிவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

4 டி20 போட்டிகளில் ஆட்டம் இளம் வீரர் சஞ்சு சாம்சன் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் இடத்தில் வைத்து பார்க்கப்படுபவர். திறமையான வீரராக இருந்தாலும் இவரால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக ஆடமுடியவில்லை. சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 2 டி20 போட்டிகள் உள்ளிட்ட 4 டி20 போட்டிகளில் மட்டுமே இதுவரை இவர் விளையாடியுள்ளார்.

நியூசிலாந்து தொடரில் சொதப்பல் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளையும் இவரால் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நியூசிலாந்து தொடரின் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய சாம்சன், முறையே 2 மற்றும் 8 ரன்களையே அடித்திருந்தார்.

உற்சாகத்துடன் காணப்படும் கோலி இதனால் அந்த தொடரில் டிரஸ்ஸிங் ரூமிலேயே அதிக நேரத்தை செலவழித்த சாம்சன், முதல்முறையாக விராட் கோலியுடன் அதிகமாக பழகும் வாய்ப்பு கிடைத்ததாகவும் மிகுந்த ஆற்றல் மிக்கவராக உள்ள விராட் கோலி, தொடர்ந்து சந்தோஷமாகவும், உற்சாகத்துடனும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மற்றவர்களையும் உற்சாகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இதேபோல தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பார் என்றும் சாம்சன் தெரிவித்துள்ளார்.

இளம்வீரர்களுக்கு அறிவுறுத்தல் இந்த சுற்றுப்பயணத்தின்போது தொடர்ந்து பேட்டிங் மற்றும் பிட்னஸ் குறித்த பல்வேறு விஷயங்களை தான் விராட்டிடம் இருந்து கற்றுக் கொண்டதாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார். போட்டிகள் இல்லாத மற்ற நேரங்களில் அவர் பிட்னஸ் பயிற்சிகளிலேயே அதிக நேரங்களை செலவிடுவதாகவும் சாம்சன் மேலும் கூறினார். விராட்டின் நேரம் தவறாமை, பயிற்சி, ஒழுக்கம் போன்றவற்றை இளம் வீரர்கள் கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இளம்வீரர்களுக்கு ரோல் மாடல் உலகிலேயே சிறந்த வீரர் விராட் கோலி என்று குறிப்பிட்டுள்ள சாம்சன், அவர் தனக்கு மட்டுமின்றி அனைத்து இளம் வீரர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். விராட் தன்மீது செலுத்தும் கவனம் மற்றும் பெரிய கிரிக்கெட் போட்டிகளில் அவர் காட்டும் திறமை உள்ளிட்டவற்றையும் இளம் வீரர்கள் கற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment