நாலு படம் நாலுவரிக்கான செய்தி …

கொரோனாவால் கடந்த மார்ச் 2௩ல் துவங்கிய ஊரடங்கு இன்று வரை தொடர்கிறது. தொற்று பரவலை தடுக்க முக்கியமானது சமூக இடைவெளி. இதைதான் அரசும் உரக்க கூறி வருகிறது.

ஆனால் பெரும்பாலானோர் எதையும் கடைபிடிப்பதில்லை.டூவீலர்களில் ஒருவரை ஒருவர் இடித்தப்படி பயணிப்பது,மளிகை,காய்கறி மார்க்கெட்டில் துவங்கி ரோட்டோர கடை வரை இடைவெளி என்பது அறவே இல்லை.

சில தனியார் அலுவலகங்களில் இளைஞர்கள் கூடியிருந்து கும்மாளம் அடிப்பதும் தொடர்கிறது. இதை எதையும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.போலீசாரும் கண்காணிப்பதில்லை. மக்களாகிய நாம்தான் இதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment