நெருக்கடி பகுதியில் சளி மாதிரி சோதனை

விருதுநகர்:விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் ஜன நெருக்கடி மிகுந்த பகுதி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் கொரோனா தொற்று சளி மாதிரி சேகரிப்பதால் குடியிருப்போர் அச்சப்படுகின்றனர்.

இங்கு தினமும் 35 பேருக்கு கொரோனா சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதற்காக வருவோர் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. இங்குள்ள நகராட்சி சுகாதார அலுவலகத்தில் சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் ஏற்பாடுகள் இருந்தும் மக்கள் கேட்பதாக தெரியவில்லை. மாதிரி எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் விழிப்புணர்வுடன் இன்றி இஷ்டத்துக்கு வெளியில் நடமாடுகின்றனர்.

டீக்கடைகள், ஓட்டல்களில் புகுந்து விடுகின்றனர். அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று குடிநீர் கேட்கின்றனர். இவர்களால் தொற்று பரவி விடுமோ என குடியிருப்போர் அச்சம் தெரிவிக்கின்றனர். அரசு தலைமை மருத்துவமனையிலே சளி மாதிரி சேரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment