விருதுநகர் மாவட்டத்தில் 20 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் – கலெக்டர் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் 20 தாசில்தார்களை திடீரென இடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் 20 தாசில்தார்களை திடீரென இடமாற்றம் செய்து கலெக்டர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் கண்ணன் பிறப்பித்துள்ள உத்தரவில் பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும், கோரிக்கை மனுக்கள் எதுவும் பெற்றுக்கொள்ள மாட்டாது என தெரிவித்துள்ளார். தாசில்தார்கள் பணியிடமாற்றம் பற்றிய விவரம் வருமாறு:-

விருதுநகர் தாசில்தார் ராஜாஉசேன், சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முத்துலட்சுமி, விருதுநகர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சங்கரபாண்டியன், சாத்தூர் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் பணியாற்றிய சாந்தி, விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் குடிமைப்பொருள் தனி தாசில்தராக இருந்த உமாராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நில எடுப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய ஷாஜகான், திருச்சுழி சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சுழி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சின்னதுரை, அருப்புக்கோட்டை கோட்ட கலால் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய சின்னதுரை, கலெக்டர் அலுவலக குற்றவியல் பிரிவு மேலாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் பிரிவு மேலாளராக பணியாற்றிய பரமானந்தராஜா கேபிள் டி.வி. தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். கேபிள் டி.வி. தனி தாசில்தார் நாகேஸ்வரி ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடத்தில் பணியாற்றிய வள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய சரவணன் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாராக பணியாற்றிய கிருஷ்ணவேணி, சிவகாசி கோட்ட கலால் அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய சிவஜோதி, அருப்புக்கோட்டை குடிமைப்பொருள் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய ரமணன், ராஜபாளையம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய ஆனந்தராஜ், ராஜபாளையம் நகர்புற வரி திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இந்த இடத்தில் பணியாற்றிய தனராஜ், ராஜபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். சிவகாசி தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் சீனிவாசன், சிவகாசி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இடத்தில் பணியாற்றிய ராஜ்குமார், விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கும் பறக்கும்படை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இதே இடத்தில் பணியாற்றி வந்த லோகநாதன், சிவகாசி தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனிதா சில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment