கொரோனாவை விரட்ட வேப்பம் பழம்: விருதுநகர் கிராம மக்கள் ‘பிஸி’

விருதுநகர்:கொரோனாவை விரட்ட சிறந்த கிருமி நாசினியாக வேப்பம் பழம் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் சீசன் தற்போது நிலவுவதால் இதை சேகரிக்கும் பணியில் விருதுநகர் கிராம மக்கள் பிஸியாக உள்ளனர்.

வேப்ப இலை, பட்டை, வேர், கட்டை, பழம், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. சிறந்த கிருமி நாசினியாக உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ளது. இயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பில் வேப்ப விதை முக்கிய பங்கு வகிக்கிறது. சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாகவும் உள்ளது. கிராமங்களில் வீடுகள் தோறும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வீட்டின் முன் மாட்டு சாணம்,மஞ்சள் பவுடருடன் வேப்ப இலையை அரைத்து தெளித்து வருகின்றனர்.

இதன் மருத்துவ குணம் கொண்ட வாசனை கிருமிகளை நெருங்க விடாது. விருதுநகர் சிவஞானபுரம் விவசாயி இருளாயி கூறியதாவது: நன்கு காய்ந்த வேப்பம் பழங்களை கிலோ ரூ.30க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை சேகரித்து வெயிலில் காய வைத்து விற்கிறோம். இதன் பவுடரை வீட்டு வளாகம் முழுவதும் தெளிப்பதால் எறும்பு, பூச்சிகள் அண்டாது, என்றார்.

Related posts

Leave a Comment