சச்சினை அவுட் ஆக்க எத்தனை மீட்டிங் நடத்திருப்போம்னே ஞாபகம் இல்லை – நாசிர் ஹுசைன்!

மும்பை : சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து அணி எத்தனை கூட்டம் நடத்தியது என ஞாபகமே இல்லை என கூறி உள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசிர் ஹுசைன். சச்சின் டெண்டுல்கர் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனாக வலம் வந்தார். மிகவும் டெக்னிகல் பேட்ஸ்மேனாக அறியப்பட்டார். அவரை விரைவில் ஆட்டமிழக்க வைப்பது தான் அப்போது அனைத்து அணிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆதிக்கம் சுமார் 20 ஆண்டுகளுக்கு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தினார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் அதிக ரன்கள் குவித்த வீரர் அவர் தான். அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரரும் அவர் தான். நூறு சதங்கள் அடித்துள்ளார் சச்சின். சிறப்பு வாய்ந்த டெக்னிக் சச்சின் குறித்து நினைவு கூர்ந்த முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசிர் ஹுசைன்,…

Read More

இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது: டிரம்ப் டுவிட்

புதுடில்லி: அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்கூறிய மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் அதிபர் டிரம்ப், தன் மனைவி மெலானியாவுடன் கலந்து கொண்டார். படை வீரர்கள் மற்றும் சேவை அமைப்புகளை கவுரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தின. இரவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கண்ணைக் கவரும் வகையிலான பட்டாசுகளை வெடித்து சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உலகின் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில், அதிபர் டிரம்ப் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக சுதந்திரத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், அதையே இந்நாள் கொண்டாடப்படுவதாகவும் பதிவிட்டார். இதற்கு…

Read More

Engineering colleges to open on August 16 AICTE NOTICE

கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கான எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளை திறக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) அறிவுறுத்தியுள்ளது. AICTE கூட்டத்தில் முடிவு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) 62-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டத்திற்கு மாற்றாக புதிய அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. புதிய…

Read More

அட்டாக் ஹெலிகாப்டர்கள்.. ஹைடெக் போர் விமானங்கள்.. லடாக்கில் இந்தியா புதிய மூவ்.. சீனா அதிர்ச்சி!

அட்டாக் ஹெலிகாப்டர்கள்.. ஹைடெக் போர் விமானங்கள்.. லடாக்கில் இந்தியா புதிய மூவ்.. சீனா அதிர்ச்சி! லடாக்: லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியா தற்போது எல்லையில் அதிக அளவில் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை களமிறக்கி உள்ளது. இந்தியா – சீனா இடையிலான லடாக் மோதல் முக்கியமான தருணத்தை எட்டி இருக்கிறது. லடாக்கில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. டெப்சாங், பாங்காங் திசோ, கல்வான்ஆகிய பகுதிகளில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அதேபோல் லடாக்கில் அனைத்து எல்லை பகுதியிலும் சீனா தொடர்ந்து தனது விமான படைகளை குவித்து வருகிறது. அதிக அளவில் சீனா தனது விமானப்படையை களமிறக்கி உள்ளது. சீனாவின் ஊடுருவலை தடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்தியா பதிலடி இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும்…

Read More

Thangam Thenarasu MLA

விருதுநகர் மாவட்டத்தில், ‘கொரொனா’தொற்று மிக வேகமாகப் பரவி வருகின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் உட்சபட்சமாக 108 பேருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போதுமான பரிசோதனைக் கருவிகள் இல்லை என்பதால் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுவோருக்கான பரிசோதனை முடிவுகள் வருவதற்கும், அவர்களில் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் அது உறுதி செய்யப்படுவதற்கும் ஏறத்தாழ 7 நாட்களுக்கு மேலாக ஆகின்றது. இந்த இடைக்காலத்தில் நோய்த்தொற்று மேலும் பரவலாக பரவ வாய்ப்பு ஏற்பட்டுவிடுகின்றது. எனவே, அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் விரைவாக முடிவுகளைப் பெற வழி செய்யும் வண்ணம் கூடுதல் கருவிகளைப் பெற்று நோய்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட ஆட்சியரைக் கழக சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும் சந்தித்து வலியுறுத்தினோம்.

Read More

“சீக்ரெட்”.. திமுகவை லெப்ட் அண்ட் ரைட் பிடித்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் வந்து சேர்ந்த மா.செ. பதவி

சென்னை: “எங்கே அரசு தப்பு செய்தது? எங்கே போலீஸ் காலதாமதம் செய்தது? முதல்வர் எங்கு முரண்பாடாக பேசினார்? நீதி எங்கே மறுக்கப்பட்டது? இது எல்லாத்தையும் சாத்தான்குளம் விவகாரத்தில், ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்” என்று ராஜேந்திர பாலாஜி சரமாரியாக கேட்ட கேள்விகளால், இப்போது அமைச்சருக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்து விட்டது. அதாவது திமுகவை எந்த அளவுக்கு விமர்சிக்கிறோமோ, அதுதான் கட்சி மீது செலுத்தப்படும் விசுவாசம் என்று அதிமுக தலைமை கருதுகிறது போலும்.. நடக்கிற ஒருசில விஷயங்களை பார்த்தால் நமக்கு அப்படித்தான் யூகிக்க தோன்றுகிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எது பேசினாலும் அது காட்டமாகவே இருக்கும்.. திமுகவுக்கு எதிரான அந்த வார்த்தைகளும், விமர்சனங்களும் தடிமனாகவே இருக்கும்.. மதரீதியாக மற்றொரு விமர்சனத்தை முன்வைக்கவும் கொந்தளித்த திமுக, ஆளுநரிடமே சென்று புகார் தந்தது. கடிவாளம் ஒரு கட்டத்தில் இது எல்லை…

Read More

திருப்பம்.. கொரோனா பற்றி முதலில் சொன்னது சீனா கிடையாது.. நாங்கள்தான்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

ஜெனிவா: சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் பரவியது தொடர்பாக சீனா, முதலில் அறிவிக்கவில்லை என்றும் அந்த நாட்டில் உள்ள உலக சுகாதார அமைப்புதான் இதை செய்தது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. உலகத்துக்கு தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்று சீனா தெரிவித்து வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால் இது தொடர்பான தகவல்களையும் சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். தகவல் பரிமாற்றம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி உலக சுகாதார அமைப்பு இந்த நோய் தொடர்பாக தங்களின் தகவல் பரிமாற்றங்கள் பற்றிய விபரங்களை வெளியிட்டது. வூஹான் மாநகராட்சியின், சுகாதார ஆணையம் டிசம்பர்…

Read More

ராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி

ராஜபாளையம் அருகே லாரி மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜபாளையம் அருகே உள்ள எம்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்த கருப்பழகு மகன் மாசானன் (வயது25). இவர் தனியார் நூற்பாலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கோதைநாச்சியார்புரம் விலக்கில் சாலையை கடக்கும் போது ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த லாரி மோதியதில் மாசானன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கருப்பழகு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி; சாதித்தவர் தமிழர்!

சென்னை: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது ‘பாரத் பயோடெக்’ நிறுவனம். இதனை நிறுவியர் கிருஷ்ணா எல்லா. தமிழரான இவர் திருத்தணியில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறந்து, இந்த மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரராக மாறி உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் ஆகியவை இணைந்து, இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இதை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்வதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆக., 15ல் நாட்டின் சுதந்திர தினத்தன்று, இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்யப்பட உள்ளது என, ஐ.சி.எம்.ஆர்., கூறியுள்ளது. யார் இந்த கிருஷ்ணா எல்லா? இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை…

Read More

சொன்னபடி செய்த அமெரிக்கா.. எல்லைக்கு விமானப்படையை அனுப்பியது.. சீனாவிற்கு எதிராக ஷாக்கிங் மூவ்!

பெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக தற்போது அமெரிக்கா சொன்னபடி அதிரடியாக செயல்பட்டு உள்ளது. சீனாவிற்கு எதிராக அந்நாட்டு எல்லைக்கு தற்போது அமெரிக்கா விமானப்படையை அனுப்பி உள்ளது. இந்தியா சீனா இடையில் லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் தலையிட்டுள்ளது. சீனா அண்டை நாடுகள் உடன் அத்துமீறி வருகிறது. அமெரிக்கா இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. சீனாவிற்கு எதிராக அமெரிக்கா படைகளை அனுப்பும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்தது. எல்லை மோதல் இந்தியாவுடன் எப்படி சீனா எல்லையில் மோதி வருகிறதோ அதேபோல் தென் சீன கடல் எல்லையிலும் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அங்கு வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் உடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. தென்…

Read More