சச்சினை அவுட் ஆக்க எத்தனை மீட்டிங் நடத்திருப்போம்னே ஞாபகம் இல்லை – நாசிர் ஹுசைன்!

மும்பை : சச்சின் டெண்டுல்கரை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து அணி எத்தனை கூட்டம் நடத்தியது என ஞாபகமே இல்லை என கூறி உள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசிர் ஹுசைன். சச்சின் டெண்டுல்கர் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேனாக வலம் வந்தார். மிகவும் டெக்னிகல் பேட்ஸ்மேனாக அறியப்பட்டார். அவரை விரைவில் ஆட்டமிழக்க வைப்பது தான் அப்போது அனைத்து அணிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஆதிக்கம் சுமார் 20 ஆண்டுகளுக்கு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தினார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் அதிக ரன்கள் குவித்த வீரர் அவர் தான். அதிக சர்வதேச சதங்கள் அடித்த வீரரும் அவர் தான். நூறு சதங்கள் அடித்துள்ளார் சச்சின்.

சிறப்பு வாய்ந்த டெக்னிக் சச்சின் குறித்து நினைவு கூர்ந்த முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் நாசிர் ஹுசைன், “ஒட்டு மொத்தமாக சிறந்த பேட்ஸ்மேனை பற்றி பேசினால், சச்சினின் சிறப்பு வாய்ந்த டெக்னிக் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.” என்று கூறினார்.

நினைவில் இல்லை “நான் இங்கிலாந்து அணி கேப்டனாக இருந்த போது டெண்டுல்கரை எப்படி அவுட் ஆக்குவது என்பது பற்றி விவாதிக்க எத்தனை அணிக் கூட்டம் நடத்தினோம் என நினைவில் இல்லை.” என சச்சின் டெண்டுல்கர் அப்போது கிரிக்கெட் உலகில் செலுத்திய ஆதிக்கத்தை குறிப்பிட்டார் நாசிர் ஹுசைன்.

டெக்னிக் தான் ரன் ஹுசைன் மேலும் கூறுகையில், டெக்னிக் தான் உலகம் முழுவதும் ரன்கள் குவிக்கிறது. எவர் ஒருவர் மெதுவாக பந்தை அடித்து, பந்து வரும் வரை காத்திருந்து பேட்டிங் செய்கிறார்களோ அவர்களை தான் எனக்கு பிடிக்கும் என்றார்.

கேன் வில்லியம்சன் தற்போது உள்ள பேட்ஸ்மேன்களில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டெக்னிகலாக ஆடுவதாக குறிப்பிட்டார் நாசிர் ஹுசைன். டி20 கிரிக்கெட்டின் காரணமாக இப்போது உள்ள பேட்ஸ்மேன்கள் கடினமாக பந்தை அடித்து ஆடுவதாகவும், ஆனால், கேன் வில்லியம்சனால் மூன்று வித போட்டிகளிலும் ரன் குவிக்க முடியும் என்றும் கூறினார் ஹுசைன்.

Related posts

Leave a Comment