ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் குழு ஆலோசனை நடத்தியது. 2021ம் ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு இன்னும் 8 மாதத்தில் அறிவிக்கப்படும் என்பதால் அதற்கு தயாராகும் சீர்திருத்தங்களை அதிமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அண்மையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவிற்கு வார்டு வாரியாக உறுப்பினர்களை நியமிக்க மாவட்ட செயலாளர்களிடம் பட்டியலை தயாரிக்குமாறு அதிமுக தலைமை உத்தரவிட்டது. இதற்கிடையில் அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். அதிமுக தலைமை கட்சியில் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பை…

Read More

பல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் 24ம்தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. எனினும் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் பள்ளிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 12 வகுப்புக்கு மட்டும் தமிழகத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு இருந்தநத மற்ற வகுப்புகளுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கல்லூரிகளில் தேர்வுகள் பொதுவாக ஏப்ரல் மற்றும் மே மாதம் தான் நடக்கும். ஆனால் இந்த முறை கொரோனா லாக்டவுன் காரணமாக இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் லாக்டவுன் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வரும் நிலையில் சில பல்கலைக்கழங்கள் இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.…

Read More

சென்னையைபோல் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. மதுரை மக்கள் அச்சம்.. ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு!

மதுரை: சென்னையை போல் மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,11,151 ஆக ஆனது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் 4 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மாநகரில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆகும். 5 மாவட்டங்களில் இதுவரை 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் சென்னையை போல் மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read More

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் பா. வளர்மதி அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா. வளர்மதி சென்னை…

Read More