கொரோனாவுக்கு மரபணு தடுப்பூசி!

அமெரிக்காவில் இன்னோ வியோ பார்மா என்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ‘ஐ.என்.ஓ-., 4800’ என்ற இந்த தடுப்பூசிக்கான முதற்கட்ட மனித சோதனைகள் மிகவும் நம்பிக்கை தருவதாக, இன்னோவியோவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித சோதனைகளில், இந்த மருந்து, 94 சதவீத அளவுக்கு வெற்றிகரமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.மரபணுவின், டி.என்.ஏ.,வை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, ஐ.என்.ஓ., 4800, மனித உடலில் செலுத்தப்பட்ட பின், அதை துாண்டுவதற்கு மின்சாரத்தில் இயங்கும் பல் துலக்கி இயந்திரம் போன்ற ஒரு கருவி மூலம் துாண்டப்படும்.அதன் பின் அது மனித செல்களில், ‘கோவிட் – -19’ வைரசை எதிர்க்கும் அணுக்களை உருவாக்கும். இதனால், இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என, இன்னோவியோவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மனித சோதனையை இன்னோவியோ நடத்தி வருகிறது. ஜூலை முதல் ஆகஸ்ட், 2020 வரை இந்த பல கட்ட சோதனைகள் நடக்கும். அதன் பின், ஜனவரி, 2021 வாக்கில், 10 லட்சம் ஐ.என்.ஓ., 4800 தடுப்பூசிகளை தயாரித்து வெளியிட முடியும் என, இன்னோவியோவின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment