தளர்வின்றி முழு ஊரடங்கு வெறிச்சோடியது விருதுநகர்

விருதுநகர்:மாவட்டத்தில் அனைத்து நகர், கிராமங்களில் முழு ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்டது.நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு அறிவிக் கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மெயின் பஜார், கருமாதி மடம், மதுரை ரோடு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டிருந்தது. இதுபோல் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார்,சாத்துார், காரியாபட்டி ஆகிய பகுதிகளும் வெறிச்சோடின.

Related posts

Leave a Comment