முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

சென்னை: முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் பா. வளர்மதி அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தற்போது அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட அதிமுக, திமுக எம்.எல்.ஏ.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் இலக்கிய அணி செயலாளருமான பா. வளர்மதிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா. வளர்மதி சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment