ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை

சென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் குழு ஆலோசனை நடத்தியது.

2021ம் ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு இன்னும் 8 மாதத்தில் அறிவிக்கப்படும் என்பதால் அதற்கு தயாராகும் சீர்திருத்தங்களை அதிமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவிற்கு வார்டு வாரியாக உறுப்பினர்களை நியமிக்க மாவட்ட செயலாளர்களிடம் பட்டியலை தயாரிக்குமாறு அதிமுக தலைமை உத்தரவிட்டது.

இதற்கிடையில் அதிமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அதிமுக தலைமை கட்சியில் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பை பலப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியை பலப்படுத்தி வருகிறது.

Related posts

Leave a Comment