பேச்சுவார்த்தை சக்சஸ்.. பிரச்சனை எல்லாம் ஓவராம்.. மீண்டும் ’துப்பறிவாளன் 2’ இயக்குகிறாரா மிஷ்கின்?

சென்னை: மீண்டும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கும் பேச்சுவார்த்தை சக்சஸ் அடைந்துள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளில் மாற்றி மாற்றி வார்த்தை போர் செய்துக் கொண்ட மிஷ்கினும் – விஷாலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

13 கண்டிஷன்கள் லண்டனில் பாதி படம் முடிவடைந்த நிலையில், திடீரென 5 கோடி சம்பளம், படத்தின் ரைட்ஸ் உள்ளிட்ட 13 விஷயங்களை குறிப்பிட்டு இயக்குநர் மிஷ்கின் ஒரு கண்டிஷனை போட, அதை பார்த்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஷால், மிஷ்கினை படத்தில் இருந்தே தூக்கி அடித்தார்.

வெப்சீரிஸ் அறிமுக விழாவில் மிஷ்கினின் தம்பி இயக்கத்தில் வெளியான ‘கண்ணாமூச்சி’ எனும் வெப்சீரிஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், விஷால் தன்னை படத்தில் இருந்து நீக்கி, அவரே அந்த படத்தை இயக்கப் போவதாகவும், மிஷ்கினை இனி எந்த தயாரிப்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தையும் கடுமையாக விமர்சித்து திட்டித் தீர்த்தார்.

பேச்சுவார்த்தை லாக்டவுன் காரணத்தால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், மிஷ்கின் மற்றும் விஷால் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் பரஸ்பரம் நடந்த விசயத்தை விட்டு, வெளியே வந்து மீண்டும் இணைந்து பணியாற்ற தயாராகி உள்ளனராம்.

மீண்டும் இயக்குவரா? அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வதும் பின்னர் இணைந்து பாராட்டுவதும் இந்த துறை பல முறை சந்தித்த ஒன்று தான். பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்ததாக கூறப்படும் நிலையில், லாக்டவுனுக்கு பிறகு துப்பறிவாளன் 2 படத்தை மிஷ்கினே இயக்குவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வதந்தி ஆனால், சிலர் இருவருக்குள்ளும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் அதுபோன்று நடைபெறவில்லை. லாக்டவுன் போரிங் காரணமாக சிலர் பரப்பிவிடும் வதந்தி இதுவென்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இரு தரப்பும் இதுவரை உறுதி செய்யவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும், விரைவில் வெளியாகிவிடும் காத்திருப்போம்.

Related posts

Leave a Comment