கடுமையாகிறது:மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்

மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருகிறது. புவி வெப்பமயமாகி வருவதால் பருவ மழைகளும் பொய்த்து வருகிறது. மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை காப்பதை விட பணத்துக்காகவும், சுய நலன் கருதி மரங்களை வெட்டி அழிப்பதும் அதிகரித்து வருகிறது.

முன்னோர் வைத்து சென்ற மரங்களை பராமரிக்காமல் விட்டதும் காரணமாக கருதப் படுகிறது. மரம் வளர்ப்பது தற்போது காலத்தின் கட்டாயமாக உள்ளது.சாலை விரிவாக்கப் பணிக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்படுகிறது. அங்கு மீண்டும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீறி வருகிறது.

தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் சாலையோரங்களில் பலன் தரும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியை நுாறு நாள் வேலை திட்டத்தில் இணைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

Related posts

Leave a Comment