வெற்றிடங்களை மரங்களால் நிரப்புவோமே

ராஜபாளையம்:பசுமை சூழ்ந்த ராஜபாளையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மாற்றாகமரக்கன்றுகள் நட்டு புதிய காடுகளை உருவாக்கி மழை பொழிவையும், சுத்தமான காற்றையும் அதிகரிப்பதே தீர்வாக அமையும் என இயற்கை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.மனிதன் தேவைக்கேற்ப தங்கள் வசிப்பிடங்களை அமைத்து கொள்வது அவசியம் தான். ஆனால் அது பேராசை எனும் நிலையை எட்டும் போது அனைவரையும் பாதிக்கிறது.

இயற்கை சமன்பாட்டை மதிக்காமல் அவசியமின்றி மரங்கள், காடுகளை அழிப்பது தொடர்கிறது. அதற்கு பதிலாக புதியதாக மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தவறி வருவது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இக்குறையை நிவர்த்தி செய்ய மரங்கள் வளர்ப்பதே தீர்வாக அமையும்.

ஒவ்வொரு மரமும் காற்றில் கலந்துள்ள நச்சு வாயுவான கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கி மனிதன் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜனை சுழற்சி முறைகளில் வெளியேற்றுகிறது. மனித உடல் வியர்வையை வெளியேற்றுவது போல் மரங்களும், தாம் உறிஞ்சி மீதமாகும் நீரை இலைகளின் துளைகள் வழியாகச் சிறிது சிறிதாகவெளியேற்றுகின்றன.

அப்படி வெளியேற்றும் நீர்ச்சத்து வளிமண்டலத்தில் கலந்து ஈரப்பதத்தை அதிகப்படுத்து கிறது. அந்த ஈரப்பதத்தை உறிஞ்சும்மேகங்கள்தான் மீண்டும் மழையாகப் பெய்கின்றது. எனவே இதை உணர்ந்து மரங்களை காப்பதும், மரக்கன்றுகளை நட்பு பராமரிக்கவும் முயற்சிக்க வேண்டும்.

Related posts

Leave a Comment