விருதுநகர் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மக்களை காக்க மறுபடியும் மாவட்ட பொறுப்பாளராக நியமனம்செய்த மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் எடப்பாடி #Kபழனிச்சாமி அவர்களுக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஐயா #Oபன்னீர்செல்வம் அவர்களுக்கும் ஆனையூர் பொதுமக்கள் சார்பாக மிக்க நன்றி விருதுநகர் மாவட்டத்தின் பாசத் தளபதி மாண்புமிகு பால் உள்ளம் கொண்ட பால்வளத் துறை #அமைச்சர் #KTராஜேந்திரபாலாஜி அவர்களின் உண்மை விசுவாசி ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் #லயன் #வீகருப்பு (எ) #லட்சுமிநாராயணன் அவர்கள் சிவகாசி தெற்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் … …
Read MoreDay: July 7, 2020
சீனாவால் உலகத்திற்கே பெரிய சேதம்.. கொதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.. பதிலடிக்கு தயாராகிறது அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே மிகப் பெரிய சேதம் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு பக்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீன நிறுவனத்தின் செல்போன் செயலிகளை தடை செய்ய யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சீனா மீது குற்றம்சாட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். ஆரம்பத்திலேயே இது தொடர்பாக உலக நாடுகளுக்கு சீனா தகவல் சொல்லவில்லை என்பது ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு. வேண்டும் என்றே, இவ்வாறு நடந்து கொண்டு பிற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக சேதம் விளைவித்ததாக ஆரம்பத்திலேயே அவர் தெரிவித்திருந்த நிலையில், ஓரளவுக்கு கொரோனா பரவல் என்பது கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கிடுகிடுவென பாதிப்பு எண்ணிக்கை…
Read Moreதமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. குணம் மிக அதிகம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று தான் மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 4500க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய…
Read MoreVijayabaskar Health minister of Tamil Nadu
தன்னை மறந்து பிறர் நலம்காக்க நேரம் அறியாமல் சிரமங்களை புன்னகையில் மறைத்துக் கொண்டு உயிர்க்காக்கும் உன்னதப் பணியில் உழைக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அத்தனை பணியாளர்களின் தியாகத்திற்கும் இதயம் நிறைந்த தொடர் நன்றிகள்!! #Vijayabaskar #CovidWarriors
Read MoreCoronavirus in India Live:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. மதுரையில் 334, கன்னியாகுமரி 119, காஞ்சிபுரத்தில் 106, செங்கல்பட்டில் 87 பேருக்கு கொரோனா. திருவள்ளூரில் 217 பேர், தூத்துக்குடியில் 144 பேர், திருநெல்வேலியில் 181 பேர் கொரோனாவால் பாதிப்பு. விருதுநகரில் இன்று ஒரே நாளில் 253 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு. தேனியில் 94 பேர், வேலூரில் 117 பேர், திருவண்ணாமலையில் 99 பேர் பாதிப்பு. ராணிப்பேட்டையில் 125 பேர், திருச்சியில் 55 பேர் தொற்றால் பாதிப்பு. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 71,116 பேர்…
Read Moreஅதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்.. பெளச்சரிடம் சொல்லி விட்டார் குவின்டன் டி காக்!
ஜோஹன்னஸ்பர்க்: டெஸ்ட் கேப்டன் பதவி ரொம்ப பிரஷர் மிகுந்தது. எனவே அதை ஏற்க ஆர்வம் இல்லை என்று தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டி காக் கூறியுள்ளார். தற்போது ஒரு நாள் அணிக்கான கேப்டனாக இருந்து வருகிறார் குவின்டன் டி காக். அவரிடம் டெஸ்ட் கேப்டன் பதவியையும் ஒப்படைக்கலாம் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அது தனக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்று குவின்டன் டிகாக்கே கூறியுள்ளார். கூடுதல் சுமையை சுமக்க தான் தயாராக இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டனாக மட்டும் தொடர வாய்ப்புள்ளது. டெஸ்ட் கேப்டனாக விரும்பவில்லை கடந்த ஜனவரி மாதம் தான் பாப் டூபிளஸிக்குப் பதிலாக குவின்டன் டி காக்கை ஒரு நாள் அணிக்கான கேப்டனாக நியமித்தனர். இந்த நிலையில், அவரை டெஸ்ட் கேப்டனாகவும்…
Read MoreGeorgian Hair And Clothes
The Task Force is considered one of many NDI-supported women’s initiatives in Georgia. During the last decade, NDI’s programs have addressed structural limitations within political institutions, such because the dearth of get together resources and support for women. NDI additionally conducts regular polling on gender points in the country and has skilled women candidates via its Future Women Leaders and Political Party Leaders applications. Participants, including some outstanding politicians, have credited NDI trainings and polling data as a key to garnering the public assist that helped them get elected. The…
Read Moreதிமுகவை ஆக்கிரமித்தவர்…. விக் வைத்து அருவறுப்பு அரசியல்.. ஸ்டாலின் மீது வேலுமணி சரமாரி பாய்ச்சல்
சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் இடமாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நீண்ட பதில் அளித்துள்ளார். முடிந்தவர் சாதிக்கிறார் – முடியாதவர் முச்சந்தியில் நின்று போதிக்கிறார் என்பதற்கு சமகால சாட்சியாகி நிற்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தினமும், நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4 கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும் தான், கொள்ளை நோய் கொரானா காலத்தில் அவர் ஆற்றி வருகின்ற மக்கள் தொண்டாகும். அதே வேளையில், உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களை பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு பகல் பாராது போராடி வருகிறார் எளிமைச் சாமானியர் அண்ணன் எடப்பாடியார்.…
Read Moreசிபிஎல்.. “தம்பி”க்கு கிடைத்த லக்கி பிரைஸ்.. 48 வயதிலும் நச்சுன்னு தேர்வானார்!
மும்பை: திறமைக்கும், வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மைதான். 48 வயதான பிரவீன் தாம்பே கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். பிசிசிஐ அனுமதி கிடைத்ததும் அவர் அதில் விளையாடுவார். மும்பையைச் சேர்ந்தவர் லெக் ஸ்பின்னர் பிரவீன் தாம்பே. நல்ல திறமையான பந்து வீச்சாளராக இருந்தபோதிலும் இந்திய அணியில் இணைந்து முழுமையாக பயன்படுத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தாம்பேவின் திறமையை ஐபிஎல் சரியாக பயன்படுத்திக் கொண்டது. மிகச் சிறப்பான பந்து வீச்சாளரை ஐபிஎல் போட்டிகள் அங்கீகரித்தன. இதோ இன்று அவர் சிபிஎல்லுக்கும் போகப் போகிறார். அதாவது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஆடப் போகிறார். சிபிஎல் தொடர் கரீபியன் லீக் தொடரில் உள்ள டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் தாம்பே சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கரிபீயன் லீக் தொடரில் ஆட தேர்வாகியுள்ள முதல் இந்திய…
Read Moreஅதிமுகவில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்…? 4 மணி நேரமாக விவாதித்த ஐவர் குழு
சென்னை: கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஐவர் குழு 4 மணி நேரமாக ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற வீதம் நியமனம் செய்வது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் ஐவர் குழு எனப்படும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது. மாலை தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்தது. அதில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொடர்பாக பிரதானமாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிர்வாக அமைப்பு முறையை மாற்றுவது பற்றி அந்த குழு பேசியிருக்கிறது. தற்போதைய நடைமுறைப்படி…
Read More