தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று.. சென்னையில் நல்ல மாற்றம்.. சரசரவென குறையும் கொரோனா!

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது.

குணம் மிக அதிகம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று தான் மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் 4500க்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் 45,839 பேர் கொரோனா பாதிப்புடன் (ஆக்டிவ் கேஸ்) சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குறையும் கொரோனா தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் 65 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1636 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில் 22374 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். பல்லாயிரம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். விரைவில் சென்னை கொரோனாவில் இருந்து மீள வாய்ப்பு உள்ளது.

மதுரை கொரோனா இன்று சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 334, கன்னியாகுமரி 119, காஞ்சிபுரத்தில் 106, செங்கல்பட்டில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 217 பேர், தூத்துக்குடியில் 144 பேர், திருநெல்வேலியில் 181 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் இன்று ஒரே நாளில் 253 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேனியில் 94 பேர், வேலூரில் 117 பேர், திருவண்ணாமலையில் 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் 125 பேர், திருச்சியில் 55 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

35,423 பேருக்கு பரிசோதனை தமிழகத்தில் இன்று 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 13,52,360 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 14,13,435 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 36,938 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment