Astrology News

அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள்

மேஷம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : திருப்திகரமான நாள்.
கிருத்திகை : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்
எடுக்கும் முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : நிம்மதி கிடைக்கும்.
ரோகிணி : இலாபம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : காரியங்கள் நிறைவேறும்.

மிதுனம்
உறவினர்களில் உண்மையானவர்களை அறிந்து கொள்வீர்கள். தேவையற்ற விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மிருகசீரிஷம் : விரயங்கள் ஏற்படும்.
திருவாதிரை : வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.

கடகம்
மனைவிவழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : பிரச்சனைகள் தீரும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்
நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். பணப்பிரச்சனையில் இருந்து விடுபட சிக்கனமாக செயல்படுவது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : சிக்கனம் தேவை.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : சோர்வு உண்டாகும்.

கன்னி
பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் மதிப்பு உண்டாகும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

உத்திரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : தெளிவு பிறக்கும்.
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

துலாம்
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நவீன பொருட்களை வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூடுதல் இலாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : செலவுகள் ஏற்படும்.
சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம் : இலாபம் கிடைக்கும்.

விருச்சகம்
குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறையும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த இலாபத்தை அடையலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஒற்றுமை குறையும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : ஆர்வம் ஏற்படும்.

தனுசு
பொருளாதார ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வராத கடன்கள் வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களிடம் நட்பு உண்டாகும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திராடம் : செலவுகள் ஏற்படும்.

மகரம்
குடும்பத்தில் சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். நெருங்கியவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : மனமகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.

கும்பம்
பிரச்சனைகள் சற்று குறையும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். ஆரோக்கியம் தொடர்பான சிறு செலவுகள் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
சதயம் : விரயங்கள் ஏற்படலாம்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

பிள்ளைகள் உங்களின் குணமறிந்து நடந்து கொள்வார்கள். கலை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.

Related posts

Leave a Comment