Coronavirus in India Live:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: உலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

மதுரையில் 334, கன்னியாகுமரி 119, காஞ்சிபுரத்தில் 106, செங்கல்பட்டில் 87 பேருக்கு கொரோனா. திருவள்ளூரில் 217 பேர், தூத்துக்குடியில் 144 பேர், திருநெல்வேலியில் 181 பேர் கொரோனாவால் பாதிப்பு. விருதுநகரில் இன்று ஒரே நாளில் 253 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு. தேனியில் 94 பேர், வேலூரில் 117 பேர், திருவண்ணாமலையில் 99 பேர் பாதிப்பு. ராணிப்பேட்டையில் 125 பேர், திருச்சியில் 55 பேர் தொற்றால் பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,545 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். தமிழகத்தில் இதுவரை 71,116 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரே நாளில் 65 பேர் மரணம். தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் 1636 பேர் உயிரிழப்பு.

Related posts

Leave a Comment