கண்மாயில் குப்பை கொட்டி எரிப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை புளியம்பட்டி செவல் கண்மாயை குடிமராமத்து பணியின் கீழ் நகர பா.ஜ.,வினர் துார் வாரி மழை நீர் சேகரம் ஆகும் வகையில் நடவடிக்கை எடுத்தனர். கரைகளை பலப்படுத்தினர்.

இந்நிலையில் கண்மாய் கரையில் நகராட்சி சுகாதார பிரிவினர் குப்பையை கொட்டி தீவைக்கின்றனர். இதை பார்த்து பொதுமக்களும் கொட்ட துவங்கி உள்ளனர். கட்டட கழிவுகளும் கொட்டப்படுகின்றன. குப்பை கொட்ட கூடாது என நகராட்சி நிர்வாகமே போர்டுவைத்து அவர்களே குப்பை கொட்டுவது வேடிக்கையாக உள்ளது. குப்பையை அப்புறப்படுத்தி மீண்டும் கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க பா.ஜ., வினர் நகராட்சி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

Related posts

Leave a Comment